ரீ ஐயப்ப பக்த பஜன சேவா சங்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு விருது
October 1, 2019
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை பெருங்குடியில் அமைந்துள்ள தனியார் அரங்கில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் ஸ்ரீ ஐயப்ப பக்த பஜன சேவா சங்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சேவா சங்க தலைவர் பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனையாளரும் டெக்கோட்டடா பயிற்ச்சியாளருமான உதயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பின்னர் பெருங்குடி பகுதியினைச் சேர்ந்த சேர்ந்த பள்ளிகளில் 2018 - 2019 கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பள்ளிகள் அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கின்னஸ் சாதனை வீரர் உதயகுமார் விருதுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பொருளாலர் சுனில் குமார், செயலாளர் பாலா, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் ஸ்ரீ ஐயப்ப பக்த பஜன சேவா சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.