தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக 43 வீடுகள் சேதம் அடைந்ததை பார்வையிட்ட பஞ்சாயத்து தலைவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினா

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக 43 வீடுகள் சேதம் அடைந்ததை பார்வையிட்ட பஞ்சாயத்து தலைவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினார்


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் வெப்பநிலை 102.2 டிகிரியை எட்டியது. இந் நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள  வேடகட்டமடுவு, தரகம்பட்டி ஆகிய கிராமத்தில் நேற்று  இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது.  இதனால் அப்பகுதியில் உள்ள குடிசை வீடுகள் ஓட்டு வீடுகள் என 43 வீடுகள் சேதமடைந்தன. அப்பகுதியில் அதிகபடியான மக்கள் வசதியின்மையால் அதிகமாக குடிசை வீடுகளில் வசிக்கின்றனர். சூறைக் காற்று வேகமாக வீசியதில்  குடிசை வீடுகள் ஓட்டு வீடுகள் பலத்த சேதமடைந்தன. 


தகவலறிந்த வேடகட்டமடுவு பஞ்சாயத்து தலைவர் ராணி முத்து, திமுக ஒன்றிய செயலாளர் சண்முக நதி உள்ளிட்ட திமுகவினர் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு வீட்டு உரிமையாளர்களுக்கு  அரிசி, எண்ணெய், பருப்பு, உப்பு, மிளகாய், நோஸ் மாஸ்க் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.


Popular posts
கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
Image
மார்ச் -05: பெட்ரோல் விலை ரூ.74.07, டீசல் விலை ரூ.67.47
Image
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் கொரொ ரானா வைரஸ் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
Image
என்எல்சி இந்தியா நிறுவன திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் - வீரவன்னியராஜா வலியுறுத்தல்