பைனான்சியர் கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது

" alt="" aria-hidden="true" />

மீஞ்சூர், 

 

சென்னை திருவொற்றியூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சக்கரை (வயது 63). இவர் சென்னை சவுகார்பேட்டையில் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்தார். மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே நேற்றுமுன்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.


 


 

இந்த நிலையில் சக்கரை மனைவி விமலா (57), தனது கணவர் கொலை குறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.

 

பொன்னேரி காவல் உதவி கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடிவந்தனர். அப்போது திருவொற்றியூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார் (40) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்.

 

விசாரணையில், பைனான்ஸ் தொழிலில் சக்கரைக்கு உதவியாக ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார் இருந்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார் சக்கரையிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பின்னர் அதை திருப்பி செலுத்தவில்லை. பலமுறை கேட்டும் பணம் கொடுக்கவில்லை. தொடர்ந்து பைனான்சியர் சக்கரை மற்றும் டிரைவர் ஜெயக்குமார் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

 

இருவரும் வீடு திரும்பினர். இதனைத்தொடர்ந்து பைனான்ஸ் வேலையில் இருவரும் ஈடுபட்டிருந்தனர். கடந்த திங்கட்கிழமை ஜெயக்குமாரிடம் கொடுத்த கடனை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இதில் ஜெயக்குமாரின் மனைவி பற்றி சக்கரை தரக்குறைவாக பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஜெயக்குமார் ஆத்திரம் அடைந்துள்ளார். பின்னர் இருவரும் மது அருந்தலாம் என கூறி நந்தியம்பாக்கம் கிராமத்திற்கு வந்தனர்.

 

ரெயில் நிலையம் அருகே இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்கரையை, ஜெயக்குமார் வெட்டி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

 

ஜெயக்குமாரை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Popular posts
கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
Image
மார்ச் -05: பெட்ரோல் விலை ரூ.74.07, டீசல் விலை ரூ.67.47
Image
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் கொரொ ரானா வைரஸ் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
Image
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக 43 வீடுகள் சேதம் அடைந்ததை பார்வையிட்ட பஞ்சாயத்து தலைவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினா
என்எல்சி இந்தியா நிறுவன திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் - வீரவன்னியராஜா வலியுறுத்தல்