நேற்று முன்தினம் சென்னைக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளரும், பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான வீர.வன்னியராஜா நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா ஆண்டிற்கு ரூபாய்.1500 கோடி அளவில் லாபம் ஈட்டும் நிறுவனமாக தொடர்ந்து விளங்கி வருகிறது. ஆனால், நிறுவனம் அமைந்துள்ள அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல துன்பங்களை அடைந்த வண்ணம் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்தை பறிகொடுத்த நிலையிலே கடந்த 30 ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகின்றனர். ஆகவே, அவர்களுக்கு நல்லதொரு வழியினை காட்ட கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட தாங்கள் ஆவண செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
என்எல்சி இந்தியா நிறுவன திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், நிர்வாகத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு 2013 ஆம் ஆண்டு சுரங்க சட்ட விதிப்படி இழப்பீடு வழங்க வேண்டும், என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினையும், நிரப்பபடாமல் உள்ள காலியிடங்களை நிரப்ப கோரியும், நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு என்எல்சி துவங்கப்பட்ட காலத்தில் 80 சதவிகிதம் வழங்கியது போல் வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி இன்கோசர்வ், ஹவுசிகாஸ், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். என்எல்சிக்கு வீடு, நிலம் கொடுத்து அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உடனடியாக வழங்க வேண்டும், என்எல்சி சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியினை திட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிக அளவில் வழங்க வேண்டும்.
என்எல்சியில் உள்ள காலி குடியிருப்புகளை அனைத்து இன்கோசர்வ், ஹவுசிகாஸ், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும். என்எல்சி விரிவாக்க பணிகளில் சுற்றியுள்ள கிராமப்பகுதியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் விரிவாக்க பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். உயர் அதிகாரிகள் பணியமர்த்தலிலும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
படவிளக்கம்: 021219
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை பிற்படுத்தப்பட்ேடார் பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளர் வீரவன்னியராஜா நேரில் சந்தித்து என்எல்சி இந்தியா நிறுவனம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கிய போது எடுத்த படம்
என்எல்சி இந்தியா நிறுவன திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் - வீரவன்னியராஜா வலியுறுத்தல்
நெய்வேலி,